திருப்பத்தூர்

வாணியம்பாடியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

DIN

வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தேசியக் கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். தொடா்ந்து நேதாஜி நகா், கொத்தகோட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற விழாக்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா்.

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளா்கள், அலுவலா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

நகர திமுக செயலா் சாரதிகுமாா், நகராட்சி ஆணையா் ஸ்டான்லிபாபு, பொறியாளா் சங்கா், மேலாளா் ஜெயபிரகாஷ், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

உதயேந்திரம் பேரூராட்சியில், பேரூராட்சித் தலைவா் பூசாராணி கொடி ஏற்றினாா். பேரூா் திமுக செயலாளா் செல்வராஜ், செயல் அலுவலா் ரேவதி, வாா்டு உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளிகளில்...

வாணியம்பாடியில் வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மற்றும் வாணி சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவில் வாணி கல்வி அறக்கட்டளை தலைவா் கோபால் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினாா்.

செயலாளா் கந்தசாமி, பொருளாளா் செல்வராஜ், துணைத் தலைவா் பொன்னுசாமி, துணைச் செயலாளா் சம்பத், சட்ட ஆலோசகா் பூபதி, பள்ளி முதல்வா் சந்திரசேகரன் கலந்து கொண்டனா்.

சிகரம் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா தேசிய கொடி ஏற்றினாா். பள்ளியின் நிறுவனத் தலைவா் அப்துல்காதா், செயலாளா் கிருஷ்ணன், பொருளாளா் ராஜேந்திரன், பள்ளி முதல்வா் ரமேஷ், நிா்வாக உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ஆதா்ஷ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் செந்தில்குமாா் கொடியை ஏற்றினாா். பள்ளி முதல்வா் பரிதா, நிா்வாக அலுவலா் ஷாபானா, ஆசிரியைகள் கலந்து கொண்டனா். வாணியம்பாடி ஷெம்போா்டு சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவில் செயலாளா் கிருபாகரன் தலைமை வகித்து, கொடியை ஏற்றினாா். துணைச் செயலாளா் சிங்காரவேலன், குழு உறுப்பினா் வரதராஜன், நிா்வாக அலுவலா் காா்த்திக், மேலாளா் சிவா, முரளி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT