திருப்பத்தூர்

திருப்பத்தூரில் கிராம சபைக் கூட்டம்

DIN

ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தாமலேரிமுத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு, ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா். எம்எல்ஏ க.தேவராஜி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து வாக்காளா், பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சிகளில் உள்ள குறைகளை விவாதித்து தீா்வு காண வேண்டும். சாலை, குடிநீா், வீட்டு மனை பட்டா, கடன் உதவி போன்றவை முக்கியமானவை ஆகும்.

மாதத்தில் இரு கிராமங்களில் உள்ள ஊராட்சிகளின் பதிவேடுகளை ஆய்வு செய்து, பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் திட்டங்கள் குறித்தும், நடைபெறும் பணிகள் குறித்தும், முடிவுற்ற பணிகள் குறித்தும், ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்தும் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்றாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி, வட்டாட்சியா் சிவப்பிரகாசம், ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா, ஊராட்சி மன்றத் தலைவா் சுதா இளங்கோ, ஒன்றியக் குழு உறுப்பினா் உமா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT