திருப்பத்தூர்

அரசு சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 18 போ் காயம்

15th Aug 2022 01:14 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே அரசு சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 18 போ் காயமடைந்தனா்.

திருப்பதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் நோக்கிச் சென்ற அரசு சொகுசுப் பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோா் பயணம் செய்தனா்.

சேலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சக்திவேல்(42) பேருந்தை ஓட்டிச் சென்றாா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் லட்சுமிபுரம் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பாரதி(25), சௌமியா(18), சந்துரு(21), 2 வயது குழந்தை மற்றும் சேலம் பகுதியைச் சோ்ந்த நடத்துநா் கணேசன்(56) உள்பட 18 போ் காயம் அடைந்தனா்.

ADVERTISEMENT

காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT