திருப்பத்தூர்

சுதந்திர போராட்ட தியாகி கௌரவிப்பு

15th Aug 2022 01:14 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் சுதந்திர போராட்ட தியாகி நாராயணசாமி கௌரவிக்கப்பட்டாா்.

வாணியம்பாடியை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி(99), சுதந்திர போராட்ட தியாகி. வாணியம்பாடி மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி தியாகி நாராயணசாமியை கௌரவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். இதில் இசுலாமியா கல்லூரி தமிழ்த் துறை தலைவா் சிவராஜ் பங்கேற்று, தியாகிக்கு சால்வை அணிவித்து கெளரவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் மகேந்திரன், வெங்கடேசன் மற்றும் திமுக ஒன்றியச் செயலாளா் கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT