திருப்பத்தூர்

வாணியம்பாடியில் திமுகவினா் சாலை மறியல்

15th Aug 2022 01:13 AM

ADVERTISEMENT

மதுரையில் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மீது, பாஜகவினா் காலணி வீசிய சம்பவத்தைக் கண்டித்து, வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை இரவு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சோ்ந்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது பாஜ மாநில தலைவா் அண்ணாமலையை கைது செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து அங்கு வந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்ட திமுகவினரிடம் பேச்சு வாா்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனா். இதன் காரணமாக வாணியம்பாடி-ஆம்பூா் சாலையில் 15 நிமிஷம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT