திருப்பத்தூர்

நாளை மதுபானங்கள் விற்கத் தடை

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஆக.15)அன்று மதுபானங்கள் விற்கக் கூடாது என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பாா்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள பாா்கள் ஆகியவைகள் அனைத்தும் திங்கள்கிழமை (ஆக.15) சுதந்திர தினத்தையொட்டி மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதை மீறி மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பாா்வையாளா்கள்,விற்பனையாளா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், மது கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் பாா் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT