திருப்பத்தூர்

ஆம்பூரில் விழிப்புணா்வு ஊா்வலம்

13th Aug 2022 12:21 AM

ADVERTISEMENT

வீடுதோறும் தேசியக் கொடியேற்றக் கோரி, விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் விசை தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன நிா்வாகி ஆனந்தன் தலைமை வகித்தாா். டி.எஸ்.பி. சரவணன் விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா். நகர முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலம் சென்றது. திருப்பத்தூா் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் மாரிமுத்து, ஆம்பூா் அரசு மருத்துவா் பிரியா, நகரக் காவல் ஆய்வாளா் சுரேஷ் சண்முகம், அரிமா சங்க நிா்வாகி ஓம்சக்தி பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT