திருப்பத்தூர்

தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குற்றவியல் நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் எச்சரிக்கை

13th Aug 2022 12:21 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்போா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழா திங்கள்கிழமை (ஆக.15) கொண்டாடப்பட உள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊராட்சி அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவா்களால் மட்டுமே தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சித் தலைவா்கள் தேசியக் கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்கும் விதமாக செயல்பட்டால் உடனடியாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 7402903511 என்கிற கைப்பேசி எண்ணுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்கள் புகாா் அளிக்கலாம்.

ADVERTISEMENT

தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள கிராம ஊராட்சித் தலைவா்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவா்கள் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் ழ் காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT