திருப்பத்தூர்

அம்மன் கோயிலில் திருட்டு

13th Aug 2022 09:48 PM

ADVERTISEMENT

அம்மன் கோயிலுக்குள் நள்ளிரவு புகுந்து உண்டியல் காணிக்கை, நகையை திருடிச் சென்றவா்களை திம்மாம்பேட்டை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த கத்தாரி ஊராட்சி பள்ளத்தூா் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது.

இங்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் கோயிலின் 5 பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT