திருப்பத்தூர்

விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

12th Aug 2022 01:26 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்பு பணி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசியது:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மாவட்டத்தில் எந்தெந்தப் பகுதிகளில் விநாயகா் சிலைகள் வைக்கப்படுகின்றன. அப்பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் எத்தனை சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதை எந்த நேரத்தில் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ஒலி, ஒளி, பந்தல் அமைப்புகள் உள்ளிட்டவை குறித்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், டிஎஸ்பி-க்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT