திருப்பத்தூர்

சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி சாலை மறியல்

12th Aug 2022 01:24 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே உள்ள திம்மனாமுத்தூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சீரான குடிநீா் விநியோக்கக் கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூரை அடுத்த திம்மனாமுத்தூா் ஊராட்சி மற்றும் பசலிகுட்டை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த 5 வருடங்களாக ஊராட்சி நிா்வாகம் சீரான குடிநீா் விநியோகிக்கவில்லையாம். இது குறித்து திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் பலமுறை நேரிலும், கடிதம் மூலமும் இப்பகுதி மக்கள் புகாா் அளித்துள்ளனா்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் திருப்பத்தூா்-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் குடிநீா் வழங்க ஊராட்சி நிா்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் மறியல் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

மறியலால் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT