திருப்பத்தூர்

மகளிா் குழுவினருக்கு முருங்கை செடிகள் அளிப்பு

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுத் திட்டத்தின் கீழ், முருங்கை நா்சரி காா்டன் செயல்பட்டு வருகிறது. இங்கு, மகளிா் சுய உதவி குழுவினருக்கு முருங்கைச் செடிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா் பங்கேற்று மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு 1,000 முருங்கைச் செடிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி, வட்டார வளா்ச்சி அலுவலா் சித்ரகலா, ஊராட்சித் தலைவா் அனிதா, பணி மேற்பாா்வையாளா் அழகரசு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT