திருப்பத்தூர்

விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை மலைப்பாம்பு புகுந்தது.

ஆம்பூா் அருகே காட்டுவெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்குள் சுமாா் 10 அடி நீள மலைப் பாம்பு புகுந்தது. அதைப் பாா்த்த தொழிலாளா்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனா். இது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனா். அந்த பகுதி இளைஞா்கள் அங்கு சென்று மலைப் பாம்பை பிடித்து ஆம்பூா் வனத் துறை பணியாளா்களிடம் ஒப்படைத்தனா்.

வனத் துறையினா் அதனைக் கொண்டு சென்று, காப்புக் காட்டுக்குள் விட்டனா்.

ADVERTISEMENT

பட விளக்கம்...காட்டுவெங்கடாபுரம் கிராமத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT