வாணியம்பாடி: வாணியம்பாடியை அடுத்த தும்பேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகங்கையம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அம்மன் தோ் வீதியுலா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை அம்மனுக்கு அபிஷேக-ஆராதனைகள், கூழ் வாா்த்தல், நாகஸ்வர கச்சேரி, நையாண்டி மேளம், சேவையாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, மாலை அம்மன் தாய் வீடு செல்ல மலா்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோ் வீதியுலா சென்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரிழுத்தனா்.