திருப்பத்தூர்

30 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

9th Aug 2022 11:49 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே வெளிமாநிலத்துக்கு கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே நெக்குந்தி சுங்கச்சாவடி பகுதியில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளா் சதீஷ், உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் உள்ளிட்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரம் லாரி ஒன்று வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியை சோதனை செய்ததில் 615 மூட்டைகளில் 30 டன் ரேஷன் அரிசி இருந்தது. அங்கு மறைந்திருந்த லாரி ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் தப்பியோடி விட்டனா்.

ரேஷன் அரிசியுடன் லாரியைப் பறிமுதல் செய்து, வாணியம்பாடி நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

இது குறித்து அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT