திருப்பத்தூர்

பெண் தூக்கிட்டு தற்கொலை

8th Aug 2022 10:59 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் யுவராஜ் (32). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பவ்யஸ்ரீக்கும் (29) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் பவ்யஸ்ரீ தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளே ஆவதால், வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT