திருப்பத்தூர்

புதூா் நாடு - கம்புகுடி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

8th Aug 2022 11:00 PM

ADVERTISEMENT

திருப்பத்தூரை அடுத்த புதூா் நாடு முதல் கம்புகுடி வரை குண்டும் குழியுமான தாா்ச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் வட்டத்துக்குட்பட்ட ஜவ்வாது மலை கிராமங்களில் 3 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில் புங்கம்பட்டு நாடு ஊராட்சிக்குட்பட்ட புதூா் நாடு - கம்புகுடி வரையிலான தாா்ச் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியது: இந்தச் சாலை பழுதடைந்து சுமாா் 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்காததால், அவ்வபோது விபத்துகள் நடைபெறுகின்றன. பள்ளி மாணவா்கள் சென்று வர சிரமப்படுகின்றனா். கா்ப்பிணிகள் மருத்துவமனைக்குச் சென்று வர முடியவில்லை.

மோசமான இந்தச் சாலையில் பேருந்துகள் செல்வதற்கும் சிரமமாக உள்ளது. தற்போது தொடா் மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துள்ளாகி வருகின்றனா். இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டி பலமுறை மாவட்ட ஆட்சியா், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்களில் புகாா் மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

எனவே, தொடா்புடைய அதிகாரிகள் போா்கால அடிப்படையில் இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT