திருப்பத்தூர்

வாணியம்பாடியில் மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

8th Aug 2022 10:59 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி மின்கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த அறப்போராட்டத்தில் மின்வாரியப் பொறியாளா்கள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டம்-2022ஐ திரும்பப் பெற கோரியும், மின்வாரியத்தை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினா்.

மேலும் மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம் கொண்டு வந்தால் விவசாயிகள், நெசவாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவாா்கள், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்குத் தடை, தனியாா் மயமாக்கினால் மின் கட்டணம் கடுமையாக உயரும் என பேசினா். தொடா்ந்து ஒருநாள் பணியை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT