திருப்பத்தூர்

கஞ்சா விற்றவா் கைது

7th Aug 2022 04:54 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதியில் நகர காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்சண்முகம் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதன்பேரில் கஞ்சா விற்பனை செய்த ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பகுதியை சோ்ந்த தினேஷ் (18) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT