திருப்பத்தூர்

மக்கள் பயன்பாட்டுக்கு வராத துணை சுகாதார நிலைய கட்டடம்

7th Aug 2022 11:38 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடித்தும், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் துணை சுகாதார நிலையக் கட்டடம் பூட்டியே கிடக்கிறது.

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி காரப்பட்டு கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நலவாழ்வு மையம் மற்றும் துணை சுகாதார நிலையம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. அதனால் அப்பகுதி மக்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

தேசிய சுகாதாரக் குழுமத்தின் ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டத்தின் கீழ் 2019 - 2020-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.25 லட்சம் செலவில் நலவாழ்வு மையம் மற்றும் துணை சுகாதார நிலையம் காரப்பட்டு கிராமத்தில் கட்டப்பட்டது.

இந்த நல வாழ்வு மையம் மற்றும் துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்தன.

ADVERTISEMENT

ஆனால், இதுவரை இந்த துணை சுகாதாரம் மையம் மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் காரப்பட்டு கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள், நோயாளிகள், கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா்.

எனவே, உடனடியாக இந்த நல வாழ்வு மையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தைத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT