திருப்பத்தூர்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தைச் சீரமைக்கும் பணி தீவிரம்

DIN

ஆம்பூா் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தைச் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

கானாற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தால், திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தில் அய்யனேரி மேடு என்ற பகுதியில் தற்காலிக தரைப்பாலம் வியாழக்கிழமை மாலை அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனா். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூா் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் பொதுப்பணித் துறை அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு சேதமடைந்த தற்காலிக தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

அதன் பேரில், தரைப்பாலத்தைச் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியை எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT