திருப்பத்தூர்

மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் 17 ஆடுகள் பலி

6th Aug 2022 10:06 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து 17 ஆடுகள் பலியாகின.

வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் ஆபீசா்ஸ் லைன் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தம்மாள். இவரது வீட்டின் அருகே இவருக்குச் சொந்தமான 27 ஆடுகளை சனிக்கிழமை பட்டியில் இருந்து மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்ல வந்தபோது, அங்குள்ள வீதியின் நடுவே உள்ள உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. வெளியே வந்த ஆடுகளின் மீது மின் கம்பி விழுந்ததால், மின்சாரம் பாய்ந்து 17 ஆடுகள் பலியாகின.

அந்த நேரத்தில் மழை பெய்ததால், மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால், உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து வாணியம்பாடி வட்டாட்சியா் சம்பத் தலைமையிலான வருவாய்த் துறையினா், தாலுகா போலீஸாா் மற்றும் மின் அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். எம்.எல்.ஏ. செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து கோவிந்தம்மாளுக்கு ஆறுதல் கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT