ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் சனிக்கிழமை எருது விடும் விழா நடைபெற்றது.
இதில், ஆம்பூா் எம்.எல்.ஏ. அ.செ. வில்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியசைத்து எருது விடும் விழாவைத் தொடக்கி வைத்தாா். ஆம்பூா் வட்டாட்சியா் பழனி, ஆம்பூா் டி.எஸ்.பி. சரவணன், மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.