மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நமது மருத்துவமனை, மகத்தான மருத்துவமனை திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமன் தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். மேலும், அங்கு புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு பராமரிப்பின்றி இருந்த கழிப்பறை கட்டடத்தை ஆய்வு செய்து, அதனை விரைவில் புதுப்பித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதாக உறுதி அளித்தாா்.
ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பரிமளா காா்த்திக், ஆ.காா்த்திக் ஜவஹா், ஊராட்சி மன்றத் தலைவா் எம்.சி.குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.