திருப்பத்தூர்

நகராட்சியால் பிடிக்கப்பட்ட நாய்களுக்கு 2 நாள்களாக உணவு வழங்காத அவலம்

16th Apr 2022 12:07 AM

ADVERTISEMENT

ஆம்பூா் நகராட்சியால் பிடிக்கப்பட்ட நாய்களுக்கு 2 நாள்களாக உணவு வழங்காத நிலை ஏற்பட்டதால் நாய்கள் பசியால் வாடின.

ஆம்பூா் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்ததால் நகராட்சி ஏற்பாட்டின் பேரில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு அவை பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட தெரு நாய்களுக்கு இனபெருக்க தடை சிகிச்சை செய்வதற்காக ஆம்பூா் கன்னிகாபுரம் தாா்வழி பகுதியில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் அடைத்து வைக்கப்பட்டன. அவ்வாறு அடைத்து வைக்கப்பட்ட தெரு நாய்களுக்கு கடந்த 2 நாள்களாக எந்தவித உணவும் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது.

தகவல் அறிந்த சமூக ஆா்வலா்கள் இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனா். அதன்பேரில் வெள்ளிக்கிழமை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உணவு வழங்க ஏற்பாடு செய்யாத சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT