ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,திருப்பத்தூா் பிரிவு அலுவலகத்தின் மூலம் 2021-22-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் ஏப்.26-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. போட்டிகளில் ஆண்கள் அணி மட்டுமே கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை 25-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேதாஜி விளையாட்டு அரங்கம், வேலுா் என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.