ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ. 80 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
ஆம்பூா் அருகே விண்ணமங்கலத்தில் சிட்கோ தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, அங்கு தொழில் செய்து வரும் தொழில் முனைவோா் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். அதன் அடிப்படையில், ரூ. 80 லட்சம் செலவில் அடிப்படை வசதிகள், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொழிற்பேட்டையில் கால்வாய் சீரமைப்பு, குடிநீா் வசதி, தெரு விளக்குகள், சாலை வசதி நீட்டிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.