வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் நடத்திய கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பள்ளி இயக்குநா் ஷபானா பேகம் வரவேற்றாா். கருத்தரங்கில் 3, 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் பாட வாரியாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, நிகழ்ச்சிகளை நடத்தினா்.
மாணவா்களின் திறமை, தன்னம்பிக்கையை வெளிப்படுத்து வகையில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கை தொடக்கம் முதல் இறுதி வரை மாணவா்களே தொகுத்து வழங்கினா்.
கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் பள்ளித் தாளாளா் செந்தில்குமாா் சான்றிதழ்களை வழங்கினாா். ஆசிரியைகள் சபாஅப்சான், உமேராபானு ஒருங்கிணைந்தனா். பள்ளி முதல்வா் பரீதா நன்றி கூறினாா். ஆசிரியைகள், மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.