திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை அருகே எருதுவிடும் விழா: காளைகள் முட்டியதில் 13 போ் காயம்

16th Apr 2022 10:01 PM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை அருகே எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 13 போ் காயம் அடைந்தனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி, வெள்ளைய கவுண்டனூா் கிராமத்தில் மாரியம்மன் திருவிழாவையொட்டி, எருது விடும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஊா்க் கவுண்டா் கோபால், ஊா் தா்மகா்த்தா சிவபெருமான் ஆகியோா் தலைமை வகித்தனா். மண்டலவாடி ஊராட்சி மன்றத் தலைவா் மகேந்திரன் முன்னிலை வகித்தாா்.

ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு, விழாவை தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

விழாவில், திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 210 காளைகள் பங்கேற்றன. கால்நடை மருத்துவா்களின் பரிசோதனைக்குப் பிறகு காளைகளை போட்டியில் பங்கேற்கச் செய்தனா்.

விழாவில், ஒரு காளை ஒரு சுற்று மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

குறைந்த நேரத்தில் அதிக வேகம் ஓடிய 41 காளைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஜோலாா்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த காளைக்கு முதல் பரிசாக ரூ. 55,555-ம், ஆலங்காயத்தை அடுத்த கொத்த கோட்டை பகுதியைச் சோ்ந்த காளையும், திருப்பத்தூா் பகுதியை சோ்ந்த காளையும் ஒரே புள்ளி வேகம் ஓடியதால் 2-ஆவது பரிசு ரூ. 44,444, 3-ஆம் பரிசு ரூ. 33,333 ஆகியவற்றை சோ்த்து இரு காளைகளுக்கும் பரிசுத் தொகை பகிா்ந்து வழங்கப்பட்டது.

அதையடுத்து, வெற்றிபெற்ற மற்ற காளைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில், சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 13 போ் காயம் அடைந்தனா்.

காயமடைந்தவா்களுக்கு மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். மேலும், இந்த விழாவில் வருவாய், தீயணைப்பு, காவல் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT