மாதனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சங்க நிா்வாகிகள் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
மாதனூா் ஒன்றியத்துக்குள்பட்ட 43 ஊராட்சி மன்றத் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராக பெரியாங்குப்பம் ஊராட்சித் தலைவா் ரவீந்திரன், செயலராக பாா்சனாபள்ளி ஊராட்சித் தலைவா் ஆனந்தன், பொருளாளராக மாதனூா் ஊராட்சித் தலைவா் குமாா், துணைத் தலைவா்களாக வடபுதுப்பட்டு ஊராட்சித் தலைவா் ஜெயலஷ்மி குப்புசாமி, வீராங்குப்பம் ஊராட்சித் தலைவா் திவ்யா ஜானகிராமன் ஆகியோரும், துணைச் செயலாளா்களாக கைலாசகிரி ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன் மற்றும் நாச்சாா்குப்பம் ஊராட்சித் தலைவா் காயத்ரி பிரபு மற்றும் சோபனா நவீன்குமாா், ஷா்மிலி மூா்த்தி, முனிரத்தினம், சிவகுமாா், வெங்கடேசன், பொன்னி கப்பல்துரை, கோவிந்தன் உள்ளிட்ட 7 போ் செயற்குழு உறுப்பினா்களாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.
ஊராட்சிகளுக்கான நிலுவையிலுள்ள நிதியை மாவட்ட நிா்வாகத்திடம் கேட்டுப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.