ஆம்பூா் அருகே கானாற்று கால்வாய் தடுப்புச் சுவா் கட்டும் பணியை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் அருகே செங்கிலிகுப்பம் கிராமத்தில் கடந்த பருவ மழைக் காலத்தின்போது, கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிக்குள் தண்ணீா் புகுந்தது. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாயினா். அதையடுத்து, ரூ. 4 லட்சம் செலவில் கானாற்று கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாதனூா் ஒன்றிய திமுக பொறுப்புக் குழு உறுப்பினா் தெய்வநாயகம் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.