திருப்பத்தூர்

ரயிலில் கடத்தப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல்

4th Apr 2022 11:45 PM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் மாா்ச் 28 முதல் ஏப்.27-ஆம் தேதி வரை தொடா்ந்து கஞ்சா மற்றும் போதைப் பொருள் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,திங்கள்கிழமை அதிகாலை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்த தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சோதனை செய்தனா். அப்பொது 3 பைகளில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT