திருப்பத்தூர்

திருப்பத்தூா் நகராட்சிப் பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

2nd Apr 2022 10:07 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து வந்த குறைகளின்பேரில் எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் நகராட்சி 22-ஆவது வாா்டு பகுதிக்குள்பட்ட இமாம் சாயபு தெரு, 23-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆரிப் நகா் ஆகிய வாா்டுகளில் பாதாளச் சாக்கடையால் முற்றிலும் பழுதடைந்துள்ள சாலைகள், கோடைக் காலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீா் பிரச்னை குறித்து அப்பகுதியில் இருந்து திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பிக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, அப்பகுதி வாா்டு உறுப்பினா்களான தில்ஷாத் பேகம், கலீல் ஆகியோருடன் சனிக்கிழமை அப்பகுதிகளுக்குச் சென்று எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆய்வு மேற்கொண்டாா்.

அதேபோல், வாா்டு 24-க்குள்பட்ட ஜாா்ஜ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் நுண் உர செயலாக்க திட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

மேலும், பணி மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்படுவதால் குப்பைகள் தேங்கி நிற்கிறது. பணிகளை விரைந்து, முழுமையாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் எம்எல்ஏ அறிவுறுத்தினாா். அப்போது வாா்டு உறுப்பினா் சுதாகா் உடன் இருந்தாா்.

ADVERTISEMENT

மேலும், சின்ன மாரியம்மன் கோயில் தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகக் கட்டடப் பணியை ஆய்வு செய்தாா்.

நகராட்சி ஆணையா் ஜெயராமராஜா, நகராட்சிப் பொறியாளா் உமா மகேஸ்வரி, நகரச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் ஆகியோா் உடன் இருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT