திருப்பத்தூர்

வாணியம்பாடி கொலை வழக்கு: காஞ்சிபுரத்தில் இருவர் கைது

DIN

காஞ்சிபுரம்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி மாநில இளைஞர் அணி செயலாளரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இருவரை காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு காவலர்கள் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் வசீம் அக்ரம்.இவர் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞர் அணியின் துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். இவரை வெள்ளிக்கிழமை வாணியம்பாடியில் மர்மக்கும்பல் ஒன்று இவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு  தலைமறைவானது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க திருப்பத்தூர் மாவட்டங்களை சுற்றியுள்ள பிற மாவட்ட எல்லைகளில் காவலர்கள் சோதனைச்சவாடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம்  அருகே பொன்னியம்பட்டரை வாகன சோதனைச்சாவடியில் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனைச்சாவடியிலிருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு ஒரு கார் வேகமாக சென்றது. உடனடியாக காவலர்கள் அந்தக் காரை துரத்தி சென்று காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சுற்றி வளைத்தனர். காரையும், காரில் இருந்த பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

காரில் இருந்த இருவரிடமும் விசாரணை செய்ததில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா காலனி நேத்தாஜி தெருவைச் சேர்ந்த பிரசாத் என்ற ரவி(19)மற்றும் வண்டலூர் கே.கே.நகர் அருகே மண்ணிவாக்கம் மேட்டுத்தெரு டில்லிகுமார்(24) என்பதும் தெரிய வந்து இருவரையும் கைது செய்தனர். 

முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரால் ஆள் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும்,மேலும் சிலரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT