திருப்பத்தூர்

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆலை முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கடந்த 1960-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் காமராஜரால் தொடங்கப்பட்டது. இந்த ஆலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரைவைக்காக கரும்பு கொண்டு வரப்பட்டது. நஷ்டம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கவில்லை.

ஆலைத் தொழிலாளா்கள் வேலை இல்லாததாலும், சம்பளம் வழங்காததாலும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனா். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனால் தொழிலாளா்கள், கரும்பு விவசாயிகளின் நலன் கருதி ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சியினா், ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கச் செயலாளா் குமாா் தலைமை வகித்தாா். ஏஐடியூசி தொழிற்சங்க மாநில துணைத் தலைவா் செயலாளா் எஸ்.ஆா். தேவதாஸ், கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொதுச்செயலாளா் பிரகாசம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT