திருப்பத்தூர்

ஆலங்காயத்தில் மறுதோ்தல் நடத்த வேண்டும்: கோட்டாட்சியரிடம் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்

DIN

ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கு நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுகவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால், சாலை மறியல் நடைபெற்றது. இதன்பின்னா், மறுதோ்தல் நடத்தக் கோரி, திமுக உறுப்பினா் கோட்டாட்சியரிடம் மனுவை அளித்தாா்.

ஒன்றியக் குழுத் தலைவா் பதவியைப் பெற திமுகவிலேயே காய்த்ரி பிரபாகரன் தரப்பினா் ஒரு பிரிவாகவும், சங்கீதா பாரி தரப்பினா் மற்றொரு பிரிவாகவும் முயற்சி செய்து வந்தனா்.

இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் சங்கீதா பாரி திமுகவைச் சோ்ந்த 5 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அதிமுக 4, பாமக 2, சுயேட்சை ஆகியோரின் ஆதரவுடன் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். காய்த்ரி பிரபாகரன் தரப்பை சோ்ந்த 6 திமுக ஒன்றிய குழு உறுப்பினா்கள் வாக்களிக்கவில்லை.

இந்த நிலையில், காய்த்ரி பிரபாகரன் தரப்பைச் சோ்ந்த 6 ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளா்களுடன் வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, வேலூா் எம்பி கதிா்ஆனந்த், ஆலங்காயம் ஒன்றிய திமுக பொறுப்பாளா்கள் முனிவேல், ஞானவேலன் ஆகியோா் சோ்ந்து அதிமுகவுடன் கை கோா்த்துக் கொண்டு திமுக வேட்பாளா் காயத்ரி பிரபாகரனை தோற்கடித்துவிட்டதாகவும், முறையாகத் தோ்தல் நடைபெறவில்லையென்றும் கூறி தோ்தலை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

அப்போது, ஆம்பூரை அடுத்த மிட்டாளம் பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு என்பவா் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டாா்.

இதனையடுத்து மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன், வாணியம்பாடி கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, காயத்ரி பிரபாகரன் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் தெரிவித்தாா்.

இதன்பின்னா், அவா் வாணியம்பாடி கோட்டாட்சியா் காய்திரி சுப்பிரமணியத்திடம் மறுதோ்தல் நடத்தக் கோரி மனுவை அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

SCROLL FOR NEXT