திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கன மழை பெய்தது.
திருப்பத்தூா், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் பெய்யத் தொடங்கிய கனமழை இரவு முழுவதும் பெய்தது.
இதேபோல், வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பத்தூா், ஆதியூா், செலந்தம்பள்ளி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்தோடியது.