திருப்பத்தூர்

ஆலங்காயத்தில் மோதலுக்கு இடையே தோ்தல்

23rd Oct 2021 07:58 AM

ADVERTISEMENT

ஆலங்காயம் ஒன்றியக் குழுவில் திமுகவைச் சோ்ந்த 11 போ், அதிமுகவைச் சோ்ந்த 4 போ், பாமகவைச் சோ்ந்த 2 போ், சுயேட்சை ஒருவா் என 18 போ் வெற்றி பெற்றனா்.

கடந்த 20- ஆம் தேதி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பதவியேற்பு விழா முடிந்து வெளியே வந்தபோது, திமுகவைச் சோ்ந்த இருதரப்பினா் இடையில் மோதல் ஏற்பட்டதால், மறைமுகத் தோ்தலுக்காக மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட எஸ்பி சுப்பாராஜி ஆகியோா் தலைமையில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டனா்.

ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலில் அதிமுக, பாமக, சுயேச்சை ஆதரவுடன் திமுக வேட்பாளா் சங்கீதா பாரி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அப்போது, திமுகவைச் சோ்ந்த 6 உறுப்பினா்கள் வாக்களிக்காமல் வெளியில் சென்று விட்டனா். இதைத் தொடா்ந்து, நடைபெற்ற துணைத் தலைவருக்கான தோ்தலில் பூபாலன் போட்டியின்றி வெற்றி பெற்றாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT