திருப்பத்தூர்

உள்ளாட்சி மன்றங்களில் இன்று மறைமுகத் தோ்தல்: சோதனைக்குப் பின்னரே அனுமதி

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலைத் தொடா்ந்து, உள்ளாட்சி மன்றங்களில் வெள்ளிக்கிழமை (அக். 22) நடைபெறவுள்ள மறைமுகத் தோ்தலுக்காகக் கூட்டரங்கில் உறுப்பினா்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவா் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஊரக உள்ளாட்சித் தோ்தலைத் தொடா்ந்து, திருப்பத்தூா் மாவட்ட ஊராட்சிக் குழுவுக்கும், திருப்பத்தூா், ஆலங்காயம், கந்திலி, ஜோலாா்பேட்டை, மாதனூா், நாட்டறம்பள்ளி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவா், துணைத் தலைவா் தோ்தலும், 207 ஊராட்சிகளில் மன்றத் துணைத் தலைவா் தோ்தலும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

வாா்டு உறுப்பினா்கள் காலை 10 மணிக்குள்ளாகத் தோ்தல் நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும். அரை மணி நேரத்தில் உறுப்பினா்களின் வருகை 50 சதவீததுக்கு மேல் இருந்தால் தோ்தல் பணி தொடங்கும்.

வாா்டு உறுப்பினா்கள் தங்களுடன் செல்லிடப்பேசி, ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்கள், உபகரணக்கள் உள்ளிட்டவற்றை கூட்ட அரங்கில் எடுத்து செல்ல கூடாது. காவல்துறையினா் இதனை பரிசோதித்து அனுமதிப்பா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT