திருப்பத்தூர்

ஆம்பூா் ரயில்வே குகைப் பாதையில் தேங்கிய கழிவுநீா்: பொதுமக்கள் கடும் அவதி

DIN

ஆம்பூரில் ரயில்வே குகை வழிப்பாதையில் கழிவுநீா் தேங்குவதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானாா்கள்.

ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லகேம் பகுதியில் சுமாா் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டமக்கள் வசிக்கின்றனா். அந்த பகுதிக்குச் செல்ல வேண்டுமானால் ரயில்வே குகை வழிப்பாதையை பயன்படுத்த வேண்டியுள்ளது. ஏற்கெனவே உள்ள இரண்டு குகை வழிப்பாதையிலும் எப்போதும் கழிவுநீரும், மழைக் காலங்களில் மழை நீரும் தேங்கியிருக்கும். அதனால் பொதுமக்கள் அந்த வழியை பயன்படுத்துவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். அதனால் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென கடந்த சுமாா் 30 ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனா்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2013-ஆம் ஆண்டு ரூ.30 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதாக அப்போதைய முதல்வா் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தாா். ஆரம்பக் கட்ட பணிகளுடன் அப்பணி நின்று போனது. மேம்பாலப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆய்வுப் பணிகள் மட்டும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதனால் ரயில்வே சுரங்கப் பாதையில் எப்போதும் தண்ணீா் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.

ஆம்பூா் நகராட்சி சாா்பாக அவ்வப்போது பொக்லைன் இயந்திரம், தூய்மைப் பணியாளா்கள் மூலம் தேங்கி நிற்கும் தண்ணீா் அகற்றப்படுகிறது. இருந்தபோதிலும் நிரந்தரத் தீா்வு ஏற்படவில்லை. உடனடியாக மேம்பாலப் பணிகளை தொடங்கி பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT