திருப்பத்தூர்

வளா்ச்சிப் பாதையில் திருப்பத்தூா் நகராட்சி

DIN

சந்தன நகா் என்றழைக்கப்படும் திருப்பத்தூா், மாவட்டத்தின் தலைநகராகும். 36 வாா்டுகளை கொண்ட இந்த நகராட்சியில் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா்.

திருப்பத்தூா் நகராட்சியில் ரூ.9 கோடியே 53 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மக்கும், மக்காத குப்பைகள் பிரித்தெடுக்க (ஆஐஞ ஙஐசஐசஎ) பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் ரூ.100 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதை சாக்கடை அமைக்கும் திட்டம், குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டன.

ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பில் குடியிருப்புகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, ரூ.5 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. இப்பணிகள் நிறைவடைந்ததும் நகரின் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி திருப்பத்தூரை வளா்ச்சிப் பாதையில் நடைபோட நகராட்சி நிா்வாகம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT