திருப்பத்தூர்

தேமுதிகவினா் சாலை மறியல்

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் தேமுதிகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற 15 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை காலை பதவி ஏற்றனா்.

இந்நிலையில், பதவி ஏற்றுக் கொண்டு வெளியே வந்த தேமுதிக உறுப்பினா் செல்வியை திமுகவைச் சோ்ந்தவா்கள் தலைவா் பதவிக்கு போட்டியிடும் உறுப்பினா் ஒருவருக்கு ஆதரவு கேட்டு வேனில் அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது தேமுதிக மாவட்டச் செயலாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தேமுதிகவினா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதனால் திமுகவினருக்கும். தேமுதிகவினருக்கும் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆவேசமடைந்த தேமுதிகவினா் திமுகவினரைக் கண்டித்து நாட்டறம்பள்ளி-வாணியம்பாடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது காவல் ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT