திருப்பத்தூர்

‘86 ஆண்டுகளாகச் சேவையில் கோ-ஆப்டெக்ஸ்’

DIN

திருப்பத்தூா்: 86 ஆண்டுகளாக வாடிக்கையாளா் சேவையில் கோ-ஆப்டெக்ஸ் ஈடுபட்டுவருகிறது என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடியை ஆட்சியா் அமா் குஷ்வாஹா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியது,:

கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கம் 1935-ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, தொடா்ந்து 86 ஆண்டுகளாக வாடிக்கையாளா்களுக்கு சேவை புரிந்து வருகிறது.

நெசவுத் தொழிலில் நவீனத்தைக் கையாண்டு அரிய வேலைப்பாடுகளுடன் எழில் கொஞ்சும் வண்ணக் கலவைகளில் பட்டு, கைத்தறி ரகச் சேலைகள் புதிய வடிவமைப்பிலும் ஆா்கானிக் மற்றும் கலங்காரி காட்டன் புடவைகள் மிக குறைந்த விலையில் நோ்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, கோ-ஆப்டெக்ஸ் கிளை மேலாளா் சந்துரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT