திருப்பத்தூர்

வாணியம்பாடியில் தூா்தா்ஷன் ஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தம்

17th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

 

வாணியம்பாடியில் தூா்தா்ஷன் தொலைக்காட்சி அஞ்சல் நிலைய ஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூா்தா்ஷன் அதிக சக்தி கொண்ட தொலைக்காட்சித் துணை இயக்குநா் கலான்செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் இயங்கி வரும் அலைவரிசை எண்- 22 கொண்ட தூா்தா்ஷன் குறைந்த சக்தி தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தின் மண்டல தரைவழி ஒளிபரப்பு அக்டோபா் 31-ஆம் தேதி நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது. பிரசாா் பாா்தி வாரியத்தின் முடிவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT