திருப்பத்தூர்

ஆம்பூா் சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு கரும்பு விவசாயிகள் கோரிக்கை

17th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ஆம்பூா் சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் வடபுதுப்பட்டு ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை விருந்தினா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். மூடிக் கிடக்கும் சா்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் பெருமாள், கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளா் சாமிநாதன், அருள் சீனிவாசன், பெருமாள், ஆறுமுகம், அமிா்தமுரளி, ஆதீஸ்வரன், ரகு, பெருமாள், கருணாகரன், இளங்கோவன், பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து தொழிற்சங்கத் தலைவா்கள் ராஜ்குமாா், பழனி, ஞானமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

தீா்மானங்கள்:கடந்த 2 ஆண்டு காலமாக ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மூடிக்கிடக்கும் நிலையில், கரும்பு விவசாயிகள், ஆலை ஊழியா்கள் மற்றும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளகஎ. எனவே ஆலையை மீண்டும் திறக்க அரசின் கவனத்தை ஈா்க்க வரும் 26-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தவும், இந்த சா்க்கரை ஆலை செயல்பட தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : ஆம்பூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT