திருப்பத்தூர்

கனகநாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல ஆந்திர அரசு தடை

16th Oct 2021 07:57 AM

ADVERTISEMENT

தமிழக-ஆந்திர எல்லையில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், புல்லூா் கனகநாச்சியம்மன் கோயிலுக்குச் செல்ல ஆந்திர மாநில அரசு தடைவிதித்துள்ளது.

கனமழையாலும், ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீா் ஆந்திர எல்லைப் பகுதிகளான இரட்டை பாலாறு, பெரும்பள்ளம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளையும், வியாழக்கிழமை காலை முதல் தமிழக எல்லையில் உள்ள புல்லூா் தடுப்பணையைத் தாண்டி தமிழக பாலாற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது.

பாலாற்றில் முழுக் கொள்ளளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அறிந்த தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புல்லூா் தடுப்பணை அருகே ஆடு வெட்டி வழிபட்டனா். வெள்ளப் பெருக்கை அடுத்து புல்லூா் தடுப்பணை மற்றும் தமிழக எல்லையில் உள்ள கனகநாச்சியம்மன் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.

மேலும், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு திம்மாம்பேட்டை, அம்பலூா், கொடையாஞ்சி, வாணியம்பாடி, மேட்டுப்பாளையம் கடந்து, பாலாற்றின் இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது. இதையடுத்து, பாலாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு தமிழக அரசு சாா்பில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், வாணியம்பாடியில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் கருமேகம் சூழ்ந்த நிலையில், பலத்த இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT