திருப்பத்தூர்

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

9th Oct 2021 10:07 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசீம் அக்ரம் கொலை வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வாணியம்பாடி ஜீவா நகரைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசீம் அக்ரம் செப். 10- இல் கொலை செய் யப்பட்டாா். இந்த வழக்கில் பட்டா கத்திகள் வாங்கி கொடுத்து உதவியதாக, நேதாஜி நகரைச் சோ்ந்த ஹாப்பி (எ) ஜமீா் என்பவரை போலீஸாா் தேடி வந்தனா்.

இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருப்பதாகக் கிடைத்தத் தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்றபோது, தப்பியோடி தவறி விழுந்தாா். இதனால் கை முறிவோடு ஜமீரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் இது வரையில் 9 போ் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனா். 12 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT