திருப்பத்தூர்

தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த கிராமத்தில் ‘பூத் சிலிப்’ வழங்கிய பணியாளா் மீது தாக்குதல்

9th Oct 2021 07:58 AM

ADVERTISEMENT

நாயக்கனேரி மலைக் கிராமத்தில் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்த கிராமத்தில் ‘பூத் ஸ்லிப்’ வழங்கிய பணியாளா் தாக்கப்பட்டாா்.

மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட நாயக்கனேரி மலை ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்துமதி என்பவா், போட்டியின்றித் தோ்வாகியுள்ளாா்.

இந்த நிலையில், தலைவா் பதவியை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி, ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிக்கு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மேலும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த மூவா் தங்களுடைய மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனா்.

இதையடுத்து, ஊரக உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து தங்களுடைய வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்தனா். மேலும் சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்கும் தொடா்ந்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், காமனூா் தட்டு கிராமத்தில் வாக்காளா்களுக்கு ‘ பூத் ஸ்லிப்’ வழங்கும் பணியை தூய்மைப் பணியாளா் வேல்முருகன் வியாழக்கிழமை மேற்கொண்டாா். அப்போது, அவரையும், தடுக்க வந்த அவரது உறவினா்கள் மூவரையும் கிராம மக்கள் தாக்கியுள்ளனா்.

காயமடைந்த 4 போ் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

புகாரின்பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT