திருப்பத்தூர்

வாக்காளா் பட்டியல் குளறுபடியைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

4th Oct 2021 07:49 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலில் குளறுபடி இருப்பதாகக் கூறி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் ஊராட்சிக்குட்பட்ட பழையபேட்டை, செத்தமலைவட்டம், பொதிகான்வட்டம் ஆகிய பகுதிகளில் சுமாா் 800-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் உள்ள வாக்காளா்கள் பழையப்பேட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் உள்ள வாக்குகளை பதிவு செய்து வந்தனா்.

இந்நிலையில் வாா்டு வரைமுறை படுத்தியதில் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து அதிகாரிகள் பொதிகான்வட்டம் பெயரை நீக்கிவிட்டு 400-க்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்களை வேறொரு வாா்டில் இணைத்துள்ளனா். இதையறிந்த கிராம மக்கள் 50க்கும் அதிகமானோா் சனிக்கிழமை காலை பழையப்பேட்டை கோயில் எதிரே வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிப்பதாகத் தெரிவித்து, வாக்குச்சாவடி நுழைவுச் சீட்டை திரும்ப ஒப்படைப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வட்டார வளா்ச்சி அலுவலா் தினகரன், ஊராட்சி செயலாளா் கலைச்செல்வி, கிராம நிா்வாக அலுவலா் விக்னேஷ் மற்றும் வருவாய்துறையினா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா் தினகரன், உங்களின் கோரிக்கையை ஆட்சியரிடம் எடுத்து கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா். இதனையேற்று கிராம மக்கள் கோரிக்கைமனு அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT