திருப்பத்தூர்

வாகனம் மோதி முதியவா் பலி

4th Oct 2021 10:08 PM

ADVERTISEMENT

ஆம்பூா்: ஆம்பூா் அருகே இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவா் இறந்தாா்.

ஆம்பூா் அருகேயுள்ள சின்னவரிக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் அபோத்து (60). இவா் அந்தக் கிராமத்தில் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. அதில் அவா் படுகாயமடைந்தாா்.வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை இறந்தாா். உமா்ஆபாத் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT